சிந்தனைத்துளிகள் 08.06.2023
தினம் சில சிந்தனைகள். சிலந்தி வலையில் சிக்கிக் கொண்ட சிறிய பூச்சி போல்.... சின்னஞ்சிறார்கள் சிக்கிக்கொண்டு சீரழிகிறார்கள் செல்போனில்... செய்வதறியாவது திகைக்கின்றனர் பெற்றோர்கள்....!! நடுத்தர குடும்ப பெண்கள் கல்யாணத்துக்கு போட்ட நகைகளை திரும்ப பார்ப்பது... பெரும்பாலும் திருமண போட்டோக்களில் மட்டும்தான் நடக்கின்ற விசயமாக உள்ளது....!! உரிய வயதில் வேலை,திருமணம், குழந்தை இல்லாதவர்கள்.. சொந்தக்கார்கள் வீட்டு விசேசங்களில் கலந்து கொள்வது... நூறு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு சமம்...!! வாய்ப்புகள் கிடைக்காமல்... அதை தேடி போகாமல் தவறு செய்யாமல் இருப்பது ஒழுக்கம்...... சந்தர்ப்பம் கிடைத்தும் தவறு செய்யாமல் தவிர்ப்பது தனிமனித ஒழுக்கம்....!! கருப்பு வண்ணம் உணர்வு பூர்வமாக கெட்டதைக் குறிக்கும்... ஆனால் கருப்பு வண்ண பலகைதான் மாணவர்களின் வாழ்க்கையை பிரகாச மாக்குகிறது...!! இரண்டே அடிதான் வலியும் இல்லை வடுவும் இல்லை ஊரை...