Posts

சிந்தனைத்துளிகள் 08.06.2023

 தினம் சில சிந்தனைகள். சிலந்தி வலையில் சிக்கிக் கொண்ட சிறிய பூச்சி போல்....       சின்னஞ்சிறார்கள் சிக்கிக்கொண்டு சீரழிகிறார்கள் செல்போனில்... செய்வதறியாவது திகைக்கின்றனர் பெற்றோர்கள்....!! நடுத்தர குடும்ப பெண்கள் கல்யாணத்துக்கு போட்ட நகைகளை திரும்ப பார்ப்பது... பெரும்பாலும் திருமண போட்டோக்களில் மட்டும்தான் நடக்கின்ற விசயமாக உள்ளது....!! உரிய வயதில் வேலை,திருமணம், குழந்தை இல்லாதவர்கள்.. சொந்தக்கார்கள் வீட்டு விசேசங்களில் கலந்து கொள்வது... நூறு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு  சமம்...!! வாய்ப்புகள் கிடைக்காமல்... அதை தேடி போகாமல் தவறு செய்யாமல் இருப்பது ஒழுக்கம்...... சந்தர்ப்பம் கிடைத்தும் தவறு செய்யாமல் தவிர்ப்பது தனிமனித ஒழுக்கம்....!!                                      கருப்பு வண்ணம் உணர்வு பூர்வமாக கெட்டதைக் குறிக்கும்... ஆனால் கருப்பு வண்ண பலகைதான் மாணவர்களின் வாழ்க்கையை பிரகாச மாக்குகிறது...!!  இரண்டே அடிதான் வலியும் இல்லை வடுவும் இல்லை  ஊரை...
தேவதையின் பரிசு ------------------------------------- சந்திரன்‌வருகைக்கு காத்திருக்கும் அந்திப் பொழுதில்    கண்களிலே காதல் செய்து  நீங்கா காயம் படைத்திடும் கந்தர்வ தேவதையை கண்டேன்... மெல்லிதழ் புன்னகையோடு வார்த்தைகளுக்கு வாழ்வு அளித்த வேளையில் ... என்னருகில் வந்து தொடுதல் இல்லாமலே என் இமைகளை மூட உத்தரவிட்டாள்..  உத்திரவிட்ட உதடுகளை  ஆசையாய் ரசித்துவிட்டு பின் அசைவின்றி அவள் இசைவுடன் என்னிமை விழித்தேன்... உள்ளங்கையில் ஓர் உன்னதப் பரிசு உயிருக்குயிராய் நேசிக்கும் என்னவளிடம் இருந்து... மாறாத அன்பும்  மறக்காத காதலும் மதிப்பிட இயலா பரிசை மறுக்கச் செய்யவில்லை.... ஏனெனில்  நினைவுகளைச் சுமக்கும் சுமைதாங்கியாய் கனவுகளை வழிநடத்தும் வழிகாட்டியாய் என்வசம் மீள இயலா பட்டியலில்  அவளன்பு இருப்பதால் அணிந்து கொண்டேன்  என் ஆன்மாவுடன்  *அவள் என்கிற அதிசயம்*  அளித்த அன்பளிப்பை💚Ⓜ️🧡
 ரசித்து ருசித்து  சுவைக்கிறேன் தேநீர் அளித்த தேவதையை

ஹைக்கூ கவிதை

 வீசி எறியப்பட்ட பின்பும்  விருந்தோம்பல் செய்கின்றது எச்சில் இலை .