சிந்தனைத்துளிகள் 08.06.2023

 தினம் சில சிந்தனைகள்.


சிலந்தி வலையில் சிக்கிக் கொண்ட சிறிய பூச்சி போல்....       சின்னஞ்சிறார்கள் சிக்கிக்கொண்டு சீரழிகிறார்கள் செல்போனில்... செய்வதறியாவது திகைக்கின்றனர் பெற்றோர்கள்....!!


நடுத்தர குடும்ப பெண்கள் கல்யாணத்துக்கு போட்ட நகைகளை திரும்ப பார்ப்பது... பெரும்பாலும் திருமண போட்டோக்களில் மட்டும்தான் நடக்கின்ற விசயமாக உள்ளது....!!


உரிய வயதில் வேலை,திருமணம், குழந்தை இல்லாதவர்கள்.. சொந்தக்கார்கள் வீட்டு விசேசங்களில் கலந்து கொள்வது...

நூறு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு  சமம்...!!


வாய்ப்புகள் கிடைக்காமல்... அதை தேடி போகாமல் தவறு செய்யாமல் இருப்பது ஒழுக்கம்...... சந்தர்ப்பம் கிடைத்தும் தவறு செய்யாமல் தவிர்ப்பது தனிமனித ஒழுக்கம்....!!                                     


கருப்பு வண்ணம்

உணர்வு பூர்வமாக

கெட்டதைக் குறிக்கும்...

ஆனால் கருப்பு வண்ண பலகைதான் மாணவர்களின் வாழ்க்கையை பிரகாச மாக்குகிறது...!! 


இரண்டே அடிதான்

வலியும் இல்லை வடுவும் இல்லை 

ஊரை திருத்த எழுதி வைத்துள்ளான் திரு  வள்ளுவன்...!! 


மருந்து கொடுத்து உடல் எடையைக் கூட்டி 

கொன்ற கோழியை தின்றவன்...

அவன் உடல் எடையை குறைக்க மருந்து சாப்பிடுகிறான்...!! 


தெருத்தெருவாய் சென்று 

கூலி வேலை பார்த்தாலும் 

தன் குடும்பம் கோபுரத்தில் 

இருக்க வேண்டும்

என நினைக்கும் ஜீவன் "அப்பா"..!!


இதைவிட அது சிறந்தது 

என்று தோன்றாத வரை ...

இல்லறத்தில் எந்த

பாதிப்பும் இல்லை.,!!


முன்பெல்லாம் மண்ணை மலடாக்க உயிர்க்கொல்லி உரங்கள் வந்தது...

இன்று மனிதனை மலடாக்க வீதிக்கு வீதி மதுக் கடை, சிக்கன் கடை, மருந்து  கடைகள், பரோட்டா, பானி பூரி, பாஸ்ட் புட் கடைகள்...!!


வீட்டு மருத்துவம்.


அகத்திக் கீரையுடன், சீரகம் , சின்ன வெங்காயம், சேர்த்து மூன்றையும் ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து அது பாதியாக சுண்டியவுடன் வடிகட்டி, அதனுடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டால், மன அழுத்தம் குறையும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.


பொது தகவல்.


தெரு நாய்கள் இல்லாத நாடு நெதர்லாந்து.

குரங்குகள் இல்லாத நாடு ஆஸ்திரேலியா.

பாம்புகள் இல்லாத நாடு அயர்லாந்து.

கொசுக்கள் இல்லாத நாடு ஐஸ்லாந்து.

காகங்கள் இல்லாத நாடு நியூசிலாந்து.

Comments