தேவதையின் பரிசு

-------------------------------------

சந்திரன்‌வருகைக்கு காத்திருக்கும் அந்திப் பொழுதில் 

 

கண்களிலே காதல் செய்து 

நீங்கா காயம் படைத்திடும் கந்தர்வ தேவதையை கண்டேன்...


மெல்லிதழ் புன்னகையோடு வார்த்தைகளுக்கு வாழ்வு அளித்த வேளையில் ...


என்னருகில் வந்து தொடுதல் இல்லாமலே என் இமைகளை மூட உத்தரவிட்டாள்.. 


உத்திரவிட்ட உதடுகளை 

ஆசையாய் ரசித்துவிட்டு பின் அசைவின்றி அவள் இசைவுடன் என்னிமை விழித்தேன்...


உள்ளங்கையில் ஓர் உன்னதப் பரிசு

உயிருக்குயிராய் நேசிக்கும் என்னவளிடம் இருந்து...


மாறாத அன்பும் 

மறக்காத காதலும் மதிப்பிட இயலா பரிசை மறுக்கச் செய்யவில்லை....


ஏனெனில் 

நினைவுகளைச் சுமக்கும் சுமைதாங்கியாய் கனவுகளை வழிநடத்தும் வழிகாட்டியாய்


என்வசம் மீள இயலா பட்டியலில் 

அவளன்பு இருப்பதால்


அணிந்து கொண்டேன் 

என் ஆன்மாவுடன்  *அவள் என்கிற அதிசயம்* 

அளித்த அன்பளிப்பை💚Ⓜ️🧡

Comments